தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் நானி தற்போது ‘தசரா’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்க கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார்.
மேலும் பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி, சாய் குமார், பூர்ணா மற்றும் ஜரீனா வஹாப் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். ஸ்ரீ லக்ஷ்மி வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் சுதாகர் செருக்குரி தயாரித்துள்ள இப்படத்திற்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய சந்தோஷ் நாரயணன் இசையமைத்துள்ளார். தசரா இப்படத்தின் அப்டேட்டுகள் தொடர்ச்சியாக வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
மேலும், இப்படத்தின் புரோமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுப்பட்டு வருகிறது. ‘தசரா’ படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ஐந்து மொழிகளில் 20 மில்லியன் பார்வையாளர்களையும் 460 ஆயிரம் லைக்குகளையும் கடந்தது.
இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, ‘தசரா’ திரைப்படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. மேலும், இப்படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 36 நிமிடம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
#Dasara is a 2 hour 36 Min Mass Festival to be celebrated and enjoyed by all 💥
It's 𝐔/𝐀 for #Dasara ❤🔥
Grand release on March 30th 🔥Natural Star @NameisNani @KeerthyOfficial @odela_srikanth @Music_Santhosh @saregamasouth pic.twitter.com/CXJMdyUykh
— SLV Cinemas (@SLVCinemasOffl) March 18, 2023