Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

திருப்பதியில் தீபிகா படுகோனே.. வைரலாகும் புகைப்படம்

deepika-padukone-swamy-darshan-at-tirupati temple

“இந்தி நடிகை தீபிகா படுகோனே பிரபல இந்தி நடிகர் ரித்திக் ரோஷனுடன் நடித்த பைட்டர் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.இந்த நிலையில் தீபிகா படுகோனே தனது தங்கை அனுஷா படுகோனவுடன் நேற்று திருப்பதிக்கு வந்தார். அலிபிரி நடைபாதை அருகே தனது காரில் வந்த தீபிகா படுகோனே திடீரென காரில் இருந்து இறங்கினார். பின்னர் தனது தங்கையுடன் நடைபாதையில் நடந்து சென்றார். தீபிகா படுகோனே நடை பாதையில் செல்வதை கண்ட பக்தர்கள் ஆரவாரம் செய்தனர்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.இதையடுத்து போலீசார் மற்றும் விஜிலென்ஸ் போலீசார் தீபிகா படுகோனேவை பலத்த பாதுகாப்புடன் திருப்பதி மலைக்கு அழைத்து வந்தனர். மலைப்பாதையில் உள்ள கோவில்களில் கற்பூரம் ஏற்றி தரிசனம் செய்தார். 3 மணி நேரம் நடந்து திருப்பதி மலையை அடைந்தார். அவருக்கு திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர். நேற்று இரவு திருப்பதி மலையில் உள்ள விருந்தினர் மாளிகையில் தங்கினார்.

இன்று காலை வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் தீபிகா படுகோனே அவரது தங்கை அனிஷா படுகோனே ஆகியோர் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். திருப்பதியில் நேற்று 56,049 பேர் தரிசனம் செய்தனர். 26,748 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.97 உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 8 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.”,

deepika-padukone-swamy-darshan-at-tirupati temple
deepika-padukone-swamy-darshan-at-tirupati temple