Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சிம்பு 48 படத்தில் இணைந்த பிரபல பாலிவுட் நடிகை. வைரலாகும் தகவல்

deepika-padukone-to-act-in-simbu-48th-movie

கோலிவுட் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது டாப் ஹீரோக்களில் ஒருவராக கலக்கி கொண்டிருப்பவர் நடிகர் சிம்பு. மாபெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள இவரது நடிப்பில் வெளியான மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல ஆகிய திரைப்படங்கள் தொடர்ச்சியாக ஹாட்ரிக் ஹிட் அடித்தது.

இதனைத் தொடர்ந்து நடிகர் சிம்பு தனது 48வது திரைப்படத்தை இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். 100 கோடி பட்ஜெட்டில் பான் இந்தியா திரைப்படமாக உருவாக இருக்கும் இப்படத்தை நடிகர் கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பையும் சமீபத்தில் படக்குழு அறிவித்திருந்தது.

இந்த நிலையில் இப்படத்தின் புதிய அப்டேட்டாக சிம்பு 48 படத்தில் பிரபல பாலிவுட் நடிகை நடிகை தீபிகா படுகோன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருப்பதோடு இது குறித்த அதிகாரிவபூர்வமான தகவல் விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

deepika-padukone-to-act-in-simbu-48th-movie
deepika-padukone-to-act-in-simbu-48th-movie