Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

நயன்தாரா கல்யாணத்துக்கு போட்ட நெக்லஸ் டிசைன் விலை இவ்வளவு கம்மியா?? ஷாப்பிங்கில் வியந்து போன பாண்டியன் ஸ்டோர்ஸ் தீபிகா.!!

deepika shopping with velavan stores

நயன்தாரா கல்யாணத்துக்கு போட்ட நெக்லஸ் டிசைனை பார்த்து வியந்துள்ளார் தீபிகா.

தமிழகத்தில் தூத்துக்குடியில் உதயமாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற பிரம்மாண்ட கடை தான் வேலவன் ஹைபர் மார்க்கெட். இதனைத் தொடர்ந்து இந்த கடையின் அடுத்த கிளை சென்னை டி நகரில் உள்ள உஸ்மான் ரோட்டில் ஏழு அடுக்கு தளத்துடன் வேலவன் ஸ்டோர்ஸ் என்ற பெயரில் கடந்த சில வருடங்களாக இயங்கி வருகிறது.

ஆடை, ஆபரணங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் என அனைத்தும் ஒரே இடத்தில் கிடைப்பதால் இந்த கடை சாதாரண சாமானிய மக்கள் முதல் திரையுலக பிரபலங்கள் வரை பலருக்கும் ஃபேவரைட் ஆக மாறி உள்ளது.

இந்த கடையில் சின்னத்திரை, வெள்ளித்திரையை சேர்ந்த பல பிரபலங்கள் ஷாப்பிங் செய்துள்ளனர். அதேபோல் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடித்து வந்த தீபிகா ஏற்கனவே கண்ணனுடன் இந்த கடையில் ஷாப்பிங் செய்துள்ளார். இந்த நிலையில் தற்போது மீண்டும் சோலோவாக ஷாப்பிங் செய்துள்ளார்.

  deepika shopping with velavan stores

deepika shopping with velavan stores

குறைந்த விலையில் அழகழகான புடவைகள் கவரிங் நகைகள் உள்ளிட்டவைகளை பார்த்து வியந்துள்ளார். நயன்தாரா தனது திருமணத்தில் போட்டிருந்த நெக்லஸ் டிசைனிங் ஒரு நகையை பார்த்து ஆச்சரியப்பட்டுள்ளார். குறைந்த விலையில் நாமளும் நயன்தாரா போட்ட அதே டிசைன் போடலாம் என சந்தோஷப்பட்டு உள்ளார். இவருடைய இந்த ஷாப்பிங் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.