தமிழ் சின்னத்திரை சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் எப்போதும் அமோக வரவேற்பு உண்டு. இந்த தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பான சீரியல்களில் ஒன்று தெய்வமகள். மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் வெற்றியையும் பெற்ற இந்த சீரியலை விகடன் நிறுவனம் தயாரித்திருந்தது.
தற்போது இந்த சீரியலை எந்தவித அனுமதியும் இல்லாமல் பெங்காலி மொழியில் debi என்ற பெயரில் கதாபாத்திரங்களின் பெயரை மட்டும் மாற்றி சன் பங்களா என்ற சேனலில் ஒளிபரப்பு செய்து வருகின்றனர். இதனால் விகடன் நிறுவனம் சன் குழும சேனலிடம் 100 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கில் எந்த அனுமதியும் இல்லாமல் சீரியலை ரீமேக் செய்து எடுத்திருப்பதாக குற்றம்சாட்டியுள்ளது.