Tamilstar
Health

இனி வீட்டிலேயே செய்யலாம் ருசியான சமோசா..

Delicious samosa made at home

வீட்டிலேயே ஈஸியான சமோசா செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.

முதலில் மைதா மாவு உப்பு தண்ணீர் மற்றும் எண்ணெய் ஊற்றி மாவை நன்கு பிசைந்து கொள்ள வேண்டும். பிறகு வெங்காயம் கொத்தமல்லி மற்ற தேவையான காய்கறிகளை பொடியாக நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.

இதனைத் தொடர்ந்து ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் காய்கறிகளை சேர்த்து பொன்னிறமாக வதங்கிய பின், இஞ்சி பச்சை மிளகாய் சேர்த்து நன்கு கிளற வேண்டும்.

பிறகு தனியாத்தூள் கரம் மசாலா எலுமிச்சைச் சாறு உருளைக்கிழங்கு சீரகத்தூள் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளற வேண்டும்.

இது ஆறும் வரை 2 டேபிள்ஸ்பூன் மைதாவை சிறிதளவு தண்ணீர் ஊற்றி பசை அளவிற்கு கரைத்து வைக்க வேண்டும்.

பின்னர் மைதா மாவை சப்பாத்தி பதத்திற்கு நன்றாக பிரட்டி முக்கோண வடிவில் செய்து எடுத்து வைத்திருந்த மசாலாவை உள்ளே வைத்து மூடி மைதா பசை மேலே தடவி எடுத்து வைக்கவும்.

இறுதியில் கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்த உடன் எடுத்து வைத்த சமோசாக்களை எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்க வேண்டும். பொன் நிறமாக பொரித்து எடுத்தப் பின் சுடச்சுட சுவையான வெஜிடபிள் சமோசா ரெடி.