தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் அருள்நிதி. இவரது நடிப்பில் டிமான்டி காலனி திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.
அதனைத் தொடர்ந்து டிமான்டி காலனி 2 படத்தில் நடித்திருந்தார். முதல் பாகத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இரண்டாம் பாகத்தையும் இயக்கினார். மேலும் இந்த படத்தில் பிரியா பவானி சங்கர், அருண்பாண்டியன், வி.ஜே அர்ச்சனா,மீனாட்சி கோவிந்தராஜன், முத்துக்குமார் போன்ற பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
சுதந்திர தினத்தன்று வெளியான இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் மிரட்டி வருகிறது. அந்த வகையில் உலக அளவில் 55 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
55+ Crore and counting! 🎉 #Demontecolony2 is taking the box office by storm ⚡️🔥🔥@BTGUniversal @RedGiantMovies_ @bbobby @ManojBeno @AjayGnanamuthu @priya_Bshankar @SamCSmusic @proyuvraaj @thinkmusicindia pic.twitter.com/ZeEvUtWbk4
— Arulnithi tamilarasu (@arulnithitamil) August 29, 2024