தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடாமுயற்சி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.
இந்நிலையில் துணை இயக்குனர் புனித் நடிகர் அஜித்தை ஷூட்டிங் ஸ்பாட்டில் ஒரு நாள் முழுவதுமாக அவரை சந்தித்து பேசியது குறித்து நிகழ்ச்சியாக சொல்லியுள்ளார்.
அதில் என் லைஃப்ல மறக்க முடியாத ஒரு தருணம்.. ஸ்பாட்டுக்கு வந்து கொடுத்த அன்பு இருக்கே ஐயோ..அது போதும் அங்கு இருக்கிற எல்லோருக்கும் இவரே தேடிப்போய் கை கொடுத்துட்டு ஒரு ஹாய் சொல்லிட்டுதான் சூட்டுக்கே வராரு. அவர் காற்ற அக்கறை இன்னும் மறக்கவே இல்ல அவர்கிட்ட பேசுற சந்தோஷத்துல ஏதேதோ உலரிட்டு இருந்தேன்.
ஆனால் கடைசியாக ஒரே ஒன்று மட்டும் ஞாபகம் இருக்கு “அஜித் சார் நான் உங்களோட பக்கா ஃபேன் பாய்”சின்ன வயசுல இருந்தே வீடு முழுக்க உங்களோட போஸ்டர் தான் இருக்கும். பியூச்சர்ல உங்கள வச்சு நான் ஒரு படம் பண்ணனும்னு தான் என்னோட ஆசை கனவு எல்லாமே ஆனால் அது நடக்குமா என்று தெரியாது? ஆனால் கடைசி வரை அதற்காக போராடிகிட்டே இருப்பேன்னு சொன்னேன் அதற்கு அஜித் சார் சிரிச்சுக்கிட்டே ஒரு hug கொடுத்தார் பாருங்க அவ்வளவுதான் i am finishhh என்று கூறியுள்ளார்.
அஜித் சார் உங்க Shooting Spot'ல full day இருந்தது பேசுனது எல்லாமே என் lifeல மறக்க முடியாத ஒரு தருணம்! எல்லா சினிமாக்காரன் Life-லையும் சினிமா உள்ள வரதுக்கு ஒருத்தர் Inspiration ahh இருப்பாங்க la…எனக்கு நீங்க தான் சார் Inspiration எல்லாமே 🤍#AjithKumar#Punith #CinemaForLife pic.twitter.com/MxFj1AoKEK
— Punith (@i_am_punith) December 13, 2024