Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

அக்டோபர் 15 முதல் தியேட்டர்கள் திறப்பது.. மாஸ்டர் ரிலீஸ் எப்போது?? – வெளியானது லேட்டஸ்ட் தகவல்

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருவதால் இந்தியாவில் பொது ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்த ஊரடங்கு விதிகளில் கொஞ்சம் கொஞ்சமாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தாலும் திரையரங்குகள், பள்ளி கல்லூரிகள் திறக்கப்படாமல் உள்ளன.

தமிழகத்தில் வரும் அக்டோபர் 15ஆம் தேதி முதல் திரையரங்குகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளன. இதனால் அடுத்தடுத்து படங்கள் ரிலீசாகும் எனவும் கூறப்பட்டு வருகிறது.

திரையரங்குகள் திறக்கப்படுவதால் மாஸ்டர் திரைப்படம் எப்போது ரிலீசாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

இந்த நிலையில் நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி இந்த வருட தீபாவளிக்கு மாஸ்டர் ரிலீஸாக வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. 2021 பொங்கலுக்கு படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளன.

2021-க்குள் தமிழகத்தில் கொரானா முற்றிலும் ஒழிந்து இயல்பு நிலை திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் திரையரங்குகளில் கூட்டம் அதிகமாக இருக்கும் என திட்டமிட்டு படக்குழு பொங்கலை தேர்வு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.