Tamilstar
Movie Reviews சினிமா செய்திகள்

தேவரா திரை விமர்சனம்

Devara Movie Review

ஆங்கிலேய ஆட்சிகாலத்தில் இந்தியாவில் இருந்து விலை மதிப்பற்ற செல்வங்கள் வெளிநாடுகளுக்கு கடத்தப்படுகின்றன. இந்த செல்வங்களை எல்லாம் கப்பலில் இருந்து கடத்தி மறுபடியும் நாட்டிற்கே கொண்டு வருவதைதே லட்சியமாக கொண்டவர்கள் ரத்தினகிரி மலையில் வாழும் நான்கு கிராம மக்கள். சுதந்திரத்திற்கு பிறகு கவனிப்பார் அற்றுபோன பிழைப்பிற்காக கடத்தலில் ஈடுபடுகிறார்கள் தேவரா , பைரா மற்றும் அவனது நண்பர்கள். இந்த கடல் கொள்ளையில் மிகப் பெரிய ஆபத்திற்கு என்பதால் தேவரா மக்களை இந்த தொழிலை கைவிட்டு விட்டு கடலுக்குள் யாரும் செல்ல கூடாது என கூறிகிறான்.

ஆனால் இதை யாரும் மதிக்காமல் சைஃப் அலிகான் மற்றும் பிற கிராம வாசிகள் தேவராவை எதிர்த்து கொலை செய்ய திட்டம் தீட்டுகின்றனர். அப்பொழுது தேவரா அவர்களுக்கு பயத்தை விதைக்க கடலுக்குள் செல்கிறார். தான் எப்போ எங்கே இருப்பேன் என தெரியாது. யாரெனும் இதை மீறி கடலுக்குள் வந்தால் பலியிடப்படுவார்கள் என எச்சரிக்கை விடுக்கிறார். அதற்கடுத்து யார் கடலுக்கு சென்றாலும் உயிரோடு திரும்பி வருவதே இல்லை. இதனால் அனைத்து கிராம வாசிகளும் பயந்து கடலுக்கு சென்றால் தேவரா கொன்று விடுவார் என்ற அச்சத்தில் இருக்கின்றனர். இதனால் அவனை கண்டிப்பாக கொன்றே தீருவேன் என சைஃப் அலிகான் பல ஆண்டுகளாக காத்துக் கொண்டு இருக்கிறார். கடலுக்குள் சென்ற தேவரா மீண்டும் ஊருக்கு வந்தாரா? சைஃப் அலி கானின் திட்டம் நிறைவேறியதா? என்பதே இந்த பாகத்தின் கதை.

தந்தை மகன் என ஜூனியர் இரு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். முதல் பாகம் முழுவதும் அப்பாவையும் இரண்டாம் பாகம் மகனையும் மையமாக வைத்து நகர்கிறது. கப்பலில் கடத்தலில் ஈடுபடும் காட்சிகள் , ஆயுத பூஜையின் போது நடக்கும் போட்டி ஒரே ஆளாக ரத்தம் தெறிக்க தெறிக்க சண்டைபோடும் காட்சிகள் நேர்த்தியாக நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் என்.டி.ஆர். வழக்கம் போல தெலுங்கு கதாநாயகியைப் போல ஜான்வி கபூர் சில ரொமான்ஸ் காட்சிகள் மற்றும் பாட்டுக்கு நடனம் ஆடிவிட்டு செல்கிறார். சைஃப் அலிகான் வில்லத்தனத்தில் மிரட்டியுள்ளார். ஜூனியர் என்.டி. ஆர் உடன் நடக்கும் திருவிழா சண்டை காட்சிகளில் ஸ்கோர் செய்துள்ளார்.

கடல் மற்றும் கடற்கொள்ளையை வாழ்வாதாரமாக கொண்டு இருக்கும் மக்களின் கதையை மையமாக வைத்து இயக்கியுள்ளார் இயக்குனர் கொரட்டால சிவா. படத்தின் முதல் பாதி மிகவும் விறுவிறுப்பாகவும் ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்து காணப்படுகிறது. ஆனால் அது படத்தின் இரண்டாம் பாதியில் இல்லாதது பலவீனம். கட்டாயத்திற்கு வைக்கப்பட்ட ரொமான்ஸ் காட்சிகளே நிறைய இடத்தை நிரப்பிவிடுகின்றன. இரண்டாம் பாதியின் காட்சி அமைப்பில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.

ரத்னவேலுவின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம். படத்தின் ஆக்‌ஷன் காட்சிகளையும் அண்டர் வாட்டர் காட்சிகளை மிக சிறப்பாக கையாண்டுள்ளார்.

அனிருத்தின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் படத்திற்கு இன்னும் பிரம்மாண்டத்தை அதிகரித்துள்ளது.

என்.டி.ஆர் ஆர்ட்ஸ் & யுவசுதா ஆர்ட்ஸ் தயாரிப்பு நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது.

Devara Movie Review
Devara Movie Review