தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் தேவயானி. அஜித், விஜய், சூர்யா, ரஜினி, கமல் என பல்வேறு நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ள இவர் சன் டிவியில் ஒளிபரப்பான கோலங்கள் உள்ளிட்ட சீரியலில் நடித்தார்.
இதனைத் தொடர்ந்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் புதுப்புது அர்த்தங்கள் என்ற சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் இவருக்கு திருமணம் ஆகி கணவரை இழந்து தனது மகன் மற்றும் மருமகளுடன் வாழ்ந்து வருகிறார்.
இப்படியான நிலையில் ஹரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் அபிஷேக்குடன் லட்சுமி வேடத்தில் நடித்து வரும் தேவயானிக்கு திருமணம் செய்து வைக்க அவரது குடும்பத்தார் முடிவு செய்தனர். சந்தோஷ் மற்றும் பவித்ரா என இருவரும் சேர்ந்து லட்சுமி ஹரி இருவருக்கும் திருமண ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
இன்னும் சில தினங்களில் இவர்கள் இருவருக்கும் சீரியலில் திருமணம் நடக்க உள்ளது. இதற்கான ப்ரோமோ வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

திருமண ப்ரீ போட்டோஷூட் நிகழ்ச்சியில் தேவயானி மாடர்ன் உடையில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன. இன்னமும் தேவயானி இளமையாக அப்படியே இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
