தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஐந்தாவது சீசன் ஒளிபரப்பாகிய முடிந்ததைத் தொடர்ந்து பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி ஹாட்ஸ்டார் இல் ஒளிபரப்பாகி வருகிறது.
உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்க தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் இருந்து அவர் விலகிக் கொண்டதால் தற்போது அவருக்கு பதிலாக நடிகர் சிம்பு தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்த வார நாமினேஷனில் இடம்பெற்ற இருந்தவர்களில் ஸ்ருதி, தாடி பாலாஜி மற்றும் சினேகன் ஆகியோர் குறைந்த ஓட்டுகளை பெற்றிருப்பதாக சொல்லப்பட்டு வந்தது. மேலும் ஸ்ருதி வெளியேற அதிக வாய்ப்பிருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக தாடி பாலாஜி பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.
அவருடைய வெளியேற்றும் குறித்த காட்சிகள் இன்று மாலை சிம்பு வந்த பிறகு ஒளிபரப்பாகும்.
