தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி யின் ஆறாவது சீசன் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.
நிகழ்ச்சியில் இருந்து கடந்த சில வாரங்களுக்கு முன்னர் யாரும் எதிர்பாராத விதமாக டிக் டாக் பிரபலமான தனலட்சுமி வெளியேற்றப்பட்டார். பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியவர் எந்த ஒரு மீடியாக்கும் பேட்டி கொடுக்காமல் இருந்து வந்த காரணத்தினால் இவர் சீக்ரெட் ரூமில் இருக்கிறார் எனவும் பேசப்பட்டு வந்தது.
இப்படியான நிலையில் instagram லைவ் வழியாக தனலட்சுமி ரசிகர்களுடன் உரையாடியுள்ளார். ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு தயங்காமல் பதிலளித்துள்ளார். அப்போது பிக் பாஸ் வீட்டிற்குள் உங்களுக்கு பிடித்த போட்டியாளர் யார் என கேட்க அசீம் தான் என தெரிவித்துள்ளார். அவர்தான் இந்த கேமை சரியாக விளையாடி வருகிறார் என தெரிவித்துள்ளார்.
வீட்டுக்குள் இருக்கும்போது எனக்கும் அவருக்கும் இடையே சில கசப்பான சம்பவங்கள் நடந்திருந்தாலும் வெளியே வந்து பார்க்கும்போது அவர்தான் சரியாக விளையாடி வருகிறார் என தெரிகிறது. நானும் அவருடைய ரசிகை ஆகிவிட்டேன் என கூறியுள்ளார்.
மேலும் பிக் பாஸ் டைட்டில் வெல்ல யாருக்கு வாய்ப்பு அதிகம் என கேட்க நிச்சயம் அசீம் தான் டைட்டில் வெல்லுவார் என தெரிவித்துள்ளார். இது பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க? என்பதை கமெண்டில் ஷேர் பண்ணுங்க.
