தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் திருச்சிற்றம்பலம் திரைப்படம் வெளியானதை தொடர்ந்து பல்வேறு திரைப்படங்கள் உருவாகி வருகின்றன.
அந்தப் படங்களில் ஒன்றுதான் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் தனுஷ் 50. தனுஷ் இயக்கி நடிக்கும் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைத்தது.
இதனை அடுத்து எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகாமல் இருந்து வந்த நிலையில் தற்போது படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கி விட்டதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது குறித்த பதிவை பார்த்த தனுஷ் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
#D50 – A @dhanushkraja Directorial 🔥 Shoot Begins! pic.twitter.com/LTsbdcFEw4
— Sun Pictures (@sunpictures) July 5, 2023