தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தனுஷ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இரண்டு குழந்தைகளுடன் இவர்களின் திருமண வாழ்க்கை 18 வருடங்கள் கடந்துள்ள நிலையில் இருவரும் ஒரு மனதாக பெறுவதாக அறிவித்தது திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தற்போது வரை குழந்தைகளுக்காக இருவரையும் சேர்ந்து வாழுமாறு இரண்டு பேரின் குடும்பத்தாரும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் தென் இந்திய திரையுலகைச் சார்ந்த பிரபலம் ஒருவர் தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து எதிர்பார்த்த ஒன்றுதான் இது அதிர்ச்சி அடைய எதுவும் இல்லை என கூறியுள்ளார். காரணம் ஆறு ஏழு வருடத்திற்கு முன்னதாகவே இருவருக்கும் இடையே பிரச்சனை இருந்தது. பிரச்சினையை தீர்க்க முயற்சி செய்தனர்.
முடியாத காரணத்தினால் தற்போது பிரிந்து விட்டனர். இவர்கள் இந்த முடிவை எடுக்க நீண்ட காலம் எடுத்துக் கொண்டனர் என கூறியுள்ளார்.