Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

டோலிவுட்டில் அறிமுகமாகும் நடிகர் தனுஷுக்கு ரூ.50 கோடி சம்பளம்?

Dhanush debut in Tollywood, gets a salary of Rs 50 crore

நடிகர் தனுஷ் 2002-ல் வெளிவந்த ‘துள்ளுவதோ இளமை’ படத்தில் அறிமுகமாகி படிப்படியாக வளர்ந்து முன்னணி கதாநாயகனாக உயர்ந்துள்ளார். இந்தி படங்களில் நடித்து வட இந்தியாவிலும் பிரபலமாகி இருக்கிறார். தற்போது ரூஸோ சகோதரர்கள் இயக்கும் ‘தி கிரே மேன்’ எனும் ஹாலிவுட் படத்தில் நடித்து வருகிறார். இதன் மூலம் அவரது நட்சத்திர அந்தஸ்து உயர்ந்து, சம்பளமும் அதிகமாகி உள்ளது.

அடுத்ததாக தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகும் புதிய படத்தில் நடிக்க தனுசை ஒப்பந்தம் செய்துள்ளனர். இப்படம் மூலம் நடிகர் தனுஷ் டோலிவுட்டில் அறிமுகமாக உள்ளார். இந்த படத்தை சிறந்த இயக்குனருக்கான தேசிய விருது பெற்ற சேகர் கம்முலா இயக்குகிறார்.

இந்த படத்தில் நடிக்க நடிகர் தனுசுக்கு ரூ.50 கோடி சம்பளம் பேசி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தனுஷ் இதுவரை வாங்கிய சம்பளத்தில் இது மிக அதிகம் என்கின்றனர். இந்த படம் ரூ.120 கோடி பட்ஜெட்டில் தயாராகிறது.