Tamilstar
News Tamil News

தனுஷின் பாலிவுட் படத்தில் அந்த ஹீரோயினும் நடிக்கிறாராமே!! குஷியான ரசிகர்கள்!!

தமிழ் நடிகரான தனுஷ் தமிழில் மட்டுமல்லாமல் பாலிவுட் படத்திலும் நடித்து வருவது அனைவரும் அறிந்ததே. இவர் இதுவரை பாலிவுட்டில் இரண்டு படங்கள் நடித்துள்ளார். மூன்றாவது படமாக ‘அட்ரங்கி ரே’என்ற படத்தில் நடிக்கவிருக்கிறார்.

இந்தப் படத்தில் தனுஷ், அக்‌ஷய் குமார் மற்றும் சாரா அலி கான் நடிக்கவுள்ள பாலிவுட் படத்தில் இன்னொரு பிரபல ஹீரோயினும் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், தற்போது அட்ரங்கி ரே படத்தில் இன்னொரு நாயகியாக டிம்பிள் ஹயாட்டி இணைந்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. இவர் கல்ஃப் படத்தில் நடித்து பிரபலமானவர்.

இவர் தமிழில், பிரபுதேவா, தமன்னா நடிப்பில் வெளியான ‘தேவி 2’ படத்திலும் நடித்ததன் மூலம் தமிழ் மக்களுக்கு பரிச்சயமானார்.

ராஞ்சனா படத்தை தொடர்ந்து மீண்டும் தனுஷ் – ஆனந்த் எல் ராய் கூட்டணி படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் தான் இசையமைக்க உள்ளார்.

இந்தப்படத்தின் கூட்டணியால் பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தற்போது இந்த படம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழத் தொடங்கியுள்ளது.