Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சாரா அலிகானுடன் பார்ட்டியில் தனுஷ்.. வைரலாகும் வீடியோ

dhanush in latest viral-video

நடிகர் தனுஷ் ஹாலிவுட் திரைப்படத்தில் களமிறங்கி நடித்து முடித்திருக்கும் படம் தான் “தி கிரேட் மேன்”. இப்படத்தை அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார், அவெஞ்சர்ஸ் என்ட்கேம் கேப்டன், கேப்டன் அமெரிக்கா உள்ளிட்ட பல படங்களை இயக்கிய ஜோய் ருசோ, ஆண்டனி ருசோ ஆகிய (ருசோ பிரதர்ஸ்) இயக்கியுள்ளனர். இந்த படத்தில் நடிகர் தனுஷுடன் இணைந்து ரயன் காஸ்லிங், கிறிஸ் இவான்ஸ் ஆகியோரும் நடித்துள்ளனர்.

இந்த படத்தை நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிலையில் நேற்றைய முன்தினம் இப்படம் நெட் பிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. இப்படத்தை பார்த்த ரசிகர்கள் தனுஷ் நன்றாக நடித்து இருக்கின்றார். ஆனால், அவருக்கு குறைவான காட்சிகள் தான் இருக்கின்றது. சில நிமிடங்களில் வந்து செல்கின்றார்.

ஆனால் படம் பார்ப்பவர்களை தன்னைப் பற்றி பேச வைத்துள்ளார் என்று கமெண்ட் செய்து வந்தனர். இந்நிலையில் இப்படத்திற்காக மும்பையில் தங்கியிருக்கும் நடிகர் தனுஷ், தயாரிப்பாளர் ரித்தேஷ் சித்வானி கொடுத்த பார்ட்டியில் கலந்து கொண்டுள்ளார். அதில் பல பாலிவுட் நட்சத்திரங்களும் கலந்து கொண்டுள்ளனர்.

அப்போது பாலிவுட் நடிகையான சாரா அலிகான் உடன் நடிகர் தனுஷ் கை கோர்த்துக்கொண்டு வெளியில் வருவதை மீடியாக்கள் சுற்றிய வளைத்து அவர்கள் இருவரையும் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் எடுத்துள்ளனர். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிய வருகிறது. மேலும் நடிகர்கள் தனுஷ் மற்றும் சாரா அளிக்கான் இருவரும் இணைந்து “அட்ரங்கீ ரே” படத்தில் அக்ஷய் குமாருடன் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.