Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

10 ஆண்டுகளை நிறைவு செய்த தனுஷ் நடித்த மரியான். இன்ஸ்டா வீடியோ வைரல்

dhanush-insta-live-video-photos

தமிழ் சினிமாவில் ஒரு பிரமிக்க வைக்கும் நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் தனுஷ். கோலிவுட்டில் மட்டுமில்லாமல் டோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என அனைத்து மொழி சினிமாக்களிலும் நடித்து ஒரு உலக அரங்கில் ஆச்சரியப்படும் அளவிற்கு சிறந்த நடிகராக உயர்ந்துள்ள இவரது நடிப்பில் அடுத்ததாக அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள “கேப்டன் மில்லர்” திரைப்படம் வெளியாக உள்ளது.

இதனைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் அடுத்ததாக டி50 என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் அவரது ஐம்பதாவது திரைப்படத்தை அவரே இயக்கி நடிக்க இருக்கிறார். ஏற்கனவே இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்புகளை படக்குழு அறிவித்து இருந்த நிலையில் இசைப்புயல் ஏ ஆர் ரகுமானுடன் இன்ஸ்டாகிராமில் லைவ் வீடியோவில் இணைந்து உரையாடிய நடிகர் தனுஷின் வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களால் வைரலாகி வருகிறது.

அதாவது, நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான மரியான் திரைப்படம் வெளியாகி 10 ஆண்டுகளை நிறைவு செய்திருப்பதை செலபரேட் செய்யும் வகையில் இப்படத்தின் இயக்குனர் பரத் பாலா, நடிகை பார்வதி ஆகியோருடன் இணைந்து இப்படத்தின் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் மற்றும் தனுஷ் லைவ் வீடியோவில் உரையாடி உள்ளனர். அதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.