Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

தனுஷின் அடுத்த படத்தின் இயக்குனர் யார் தெரியுமா? முதல் முறையாக இணையும் கூட்டணி..

Dhanush Joins With Director Sundar C

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் மாறன் திரைப்படம் வெளியானதை தொடர்ந்து அடுத்ததாக தனுஷ் நடிப்பில் திருச்சிற்றம்பலம், நானே வருவேன், வாத்தி உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாக உள்ளன.

இந்த படங்களை தொடர்ந்து தனுஷ் அடுத்தடுத்து பல இயக்குனர்களுடன் இணைந்து பணியாற்ற உள்ளார். இந்தப் படங்களைத் தொடர்ந்து தனுஷ் அடுத்ததாக முதல் முறையாக சுந்தர் சி இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து தனுஷ் சுந்தர் சி இடம் காமெடி படமா அல்லது ஆக்சன் படமா என கேட்க நமக்கு எப்போதும் காமெடிதான் கைகொடுக்கும் என சுந்தர் சி கூறியுள்ளார். அதன் பிறகு கொஞ்ச நேரம் யோசித்த தனுஷ் ஓகே படத்தில் நடிக்க சம்மதம் என தெரிவித்துள்ளார்.

இதனால் விரைவில் தனுஷ், சுந்தர் சி கூட்டணியில் ஒரு திரைப்படம் உருவாக உள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Dhanush Joins With Director Sundar C
Dhanush Joins With Director Sundar C