Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

முதல் முறையாக இணையும் தனுஷ் வடிவேலு காம்போ.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

dhanush-movie-latest-update

கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை நடித்து மாபெரும் முன்னணி நடிகராக அனைவருக்கும் பரிச்சயமானவர் நடிகர் தனுஷ். இவர் தற்போது வாத்தி திரைப்படத்தின் வரவேற்பை தொடர்ந்து அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து வரிசையாக பல படங்களில் கமிட்டாகி இருக்கும் நடிகர் தனுஷ் கர்ணன் திரைப்படத்தின் மாபெரும் வரவேற்பைத் தொடர்ந்து மீண்டும் மாறி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.

இப்படத்தை தனுஷின் வண்டர் பார் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இது குறித்த அதிகாரம் பூர்வமான அப்டேட் சமீபத்தில் வெளியாகி வைரலானதை தொடர்ந்து தற்போது இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் தனுஷ் உடன் இணைந்து நடிகர் வடிவேலு நடிக்க இருப்பதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே தனுஷின் படிக்காதவன் திரைப்படத்தில் நடித்திருந்த வடிவேலு பாதியிலேயே விலகியதால் அந்த கதாபாத்திரத்தை விவேக் நடித்திருந்தார்.

அதன் பிறகு மீண்டும் முதல் முறையாக தனுஷ், வடிவேலு காம்போ இணைய இருப்பதால் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் இப்படம் குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பதற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.