தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக திகழ்பவர்தான் நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் ரசிகர்களின் இடையே பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து திரையில் வெற்றி கரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படத்தை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் திரைப்படம் தான் “நானே வருவேன்”.
இப்படத்தை அவரது சகோதரரும் பிரபல திரைப்பட இயக்குனருமான செல்வராகவன் இயக்கியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி இருக்கும் இப்படத்தை வி கிரியேஷன்ஸ் கலைப்புலி எஸ் தானு அவர்கள் தயாரித்துள்ளார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக பாலிவுட் நடிகை எல்லி அவ்ராமும் நடித்துள்ளார். மேலும் யோகி பாபு மற்றும் இயக்குனர் செல்வராகவன் இருவரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இதில் இரட்டை வேடங்களில் நடித்து இருக்கும் தனுஷின் போஸ்டர்கள், டீசர் மற்றும் முதல் பாடல் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வைரலானதை தொடர்ந்து பத்து ஆண்டுகளுக்குப் பிறகு தனுஷ், செல்வராகவன், யுவன் சங்கர் ராஜா கூட்டணியில் உருவாகியுள்ள இப்படம் வரும் செப்டம்பர் 29ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருப்பதாக படக்குழு அதிகாரவபூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதனால் மணிரத்தினம் இயக்கியுள்ள பிரம்மாண்ட படைப்பான பொன்னியின் செல்வன்1 திரைப்படம் வரும் 30ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் அவர்களுடன் நேரடியாக மோத இருக்கிறது தனுஷின் நானே வருவேன் திரைப்படம். இந்த தகவல் தற்பொழுது ரசிகர்களின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
Naane Varuven 🏹 #sep29 worldwide pic.twitter.com/akSuEw3TOz
— Dhanush (@dhanushkraja) September 20, 2022