Tamilstar
News Tamil News

தனுஷின் அடுத்த பிளான்! கொரோனாவுக்கு பின் இதுதானாம்!

தனுஷுக்கு அடுத்ததாக கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஜகமே தந்திரம் படம் வெளியாகவுள்ளது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன், கார்த்திக் நரேனுடன் ஒரு படம், ஹிந்தி படம் என கையில் 8 படங்கள் உள்ளன.

நடிகர், பாடகர், பாடலாசிரியர் என கலக்கி வந்த தனுஷ் பா.பாண்டி படத்தின் மூலம் இயக்குனராகவும் அறிமுகமாகிவிட்டார். இதில் ராஜ் கிரண், பிரசன்னா, சாயா சிங் என பலர் நடித்திருந்தனர்.

இதன பின் அவர் நான் ருத்ரன் என்ற சரித்திர கதையை படமாக்கி வந்தார். கொரோனா ஊரடங்கிற்கிடையில் இப்படம் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் ஊரடங்கு நிறைவடைந்த பின் தனுஷ் மீண்டும் இப்படப்பிடிப்பை தொடரவுள்ளாராம். தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் இப்படம் எடுக்கப்படுகிறதாம்.