Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கார்த்திக் சுப்புராஜின் சிறப்பான படைப்பு ஜிகர்தண்டா 2: தனுஷ் பதிவு

ஜிகர்தண்டா’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 8 வருடங்களுக்கு பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படம் நாளை (நவம்பர் 10) திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

இந்த நிலையில், ஜிகர்தண்டா 2 படத்தை பார்த்துவிட்டதாக நடிகர் தனஷ் தனது எக்ஸ் பதிவில் தெரிவித்து இருக்கிறார். மேலும் படம் குறித்த தனது கருத்துக்களையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பான பதிவில், “ஜிகர்தண்டா 2 படத்தை பார்த்துவிட்டேன். கார்த்திக் சுப்பராஜின் சிறப்பான படைப்பு. அற்புதமாக இருப்பது எஸ்.ஜே. சூர்யாவுக்கு வாடிக்கையான விஷயமாகிவிட்டது. ராகவா லாரன்ஸ்-இன் நடிப்பு சிறப்பு. சந்தோஷ் நாராயணின் இசை அழகு. படத்தின் கடைசி 40 நிமிடங்கள் உங்களின் மனங்களை கொள்ளையடித்துவிடும். படக்குழுவிற்கு எனது வாழ்த்துக்கள்,” என்று தெரிவித்து இருக்கிறார்

.