Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

காந்தாரா திரைப்படத்தை பாராட்டிய நடிகர் தனுஷ் டிவிட்.!!

dhanush tweet about kantara movie update

இந்திய திரை உலகில் பிரபல முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் சமீபத்தில் திருச்சிற்றம்பலம் மற்றும் நானே வருவேன் திரைப்படம் திரையரங்கில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதனை தொடர்ந்து நடிகர் தனுஷ் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் கன்னட மொழியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் ‘காந்தாரா’ படம் பற்றி புகழ்ந்து தள்ளி இருக்கிறார். அவை தற்போது வைரலாகி வருகிறது. அதில் அவர், இந்த படத்தை அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டும், என்ன ஒரு பிரமிப்பு ரிஷப் ஷெட்டி நடிப்பில் அசத்தியுள்ளார். மற்ற கலைஞர்களும் சிறப்பாக நடித்துள்ளீர்கள், காந்தாரா ஒரு பிரம்மிப்பு என்று பதிவிட்டு இருக்கிறார்.