Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

வாத்தி படத்தின் முதல் பாடல் குறித்து ஜிவி பிரகாஷ் கொடுத்த அப்டேட்..உற்சாகத்தில் ரசிகர்கள்

dhanush-vathi-movie-first-single-release-date-update

கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை முன்னணி நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் திருச்சிற்றம்பலம் மற்றும் நானே வருவேன் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்ததை தொடர்ந்து நடிகர் தனுஷ் தற்போது கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இதற்கிடையில் நடிகர் தனுஷ் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகி இருக்கும் “வாத்தி”திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இதில் இவருக்கு ஜோடியாக நடிகை சம்யுக்தா மேனன் நடிக்க பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வரும் டிசம்பர் 2 ஆம் தேதி நேரடியாக வெளியாக இருக்கும் இப்படத்தின் புதிய போஸ்டர் அண்மையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகி வைரலானது.

இதனைத் தொடர்ந்து தற்போது வாத்தி படத்தின் புதிய அப்டேட் ஒன்றை இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். அதாவது, இப்படத்தில் தனுஷ் எழுதி ஜிவி பிரகாஷ் இசையமைப்பில் கிராமத்து குத்து பாடலாக உருவாகி இருக்கும் வாத்தி திரைப்படத்தின் முதல் பாடல் வரும் நவம்பர் 10ஆம் தேதி வெளியாகும் என்ற அதிகாரபூர்வமான அறிவிப்பை அவர் பகிர்ந்து இருக்கிறார். இதனை அறிந்த தனுஷ் ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புகளுடன் இந்த தகவலை ட்ரெண்டிங் ஆக்கி வருகின்றனர்.