இந்திய திரை உலகில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் டாப் ஹீரோவாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் அண்மையில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. இப்படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷின் நடிப்பில் ‘நானே வருவேன் மற்றும் வாத்தி’ போன்ற திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது.
அந்த வகையில் ‘நானே வருவேன்’ திரைப்படத்தின் ரிலீஸ் டேட் குறித்த அறிவிப்பு ஏற்கனவே வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருந்த நிலையில் தற்பொழுது ‘வாத்தி’ திரைப்படத்தின் ரிலீஸ் டேட் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் தயாராகி இருக்கும் திரைப்படம் தான் வாத்தி. இப்படம் தமிழில் ‘வாத்தி’ என்றும் தெலுங்கில் ‘சர்’ என்றும் வெளியாக உள்ளது. சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் தயாரித்திருக்கும் இப்படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடித்துள்ளனர்.
ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து இருக்கும் இப்படம் வரும் டிசம்பர் 2ஆம் தேதி அனைத்து திரையரங்குகளிலும் வெளியாக உள்ளதாக இப்படத்தின் படக்குழு அதிகாரவபூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதனை தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களை உற்சாக அடைய செய்துள்ளார்.
Official : #Vaathi / #SIR is releasing on 2nd Dec 2022! #SIRMovieOn2ndDec #VaathiOn2ndDec @dhanushkraja #VenkyAtluri @iamsamyuktha_ @vamsi84 @cinemaport_in #Cinemaport #Dhanush #Dhanushkraja pic.twitter.com/GA9f0txgy8
— Cinemaport (@cinemaport_in) September 19, 2022