Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

அமெரிக்காவில் குடும்பத்துடன் ‘கர்ணன்’ படம் பார்த்த தனுஷ்

Dhanush watched the movie 'Karnan' with his family in America

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் கர்ணன். கடந்த 9-ந்தேதி ரிலீசான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதோடு திரையுலக பிரபலங்களும் இந்தப் படத்தை பார்த்து பாராட்டி வருகின்றனர். இப்படம் முதல் நாளில் 10 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.

இந்நிலையில், தற்போது தி கிரே மேன் எனும் ஹாலிவுட் படத்தில் நடிப்பதற்காக அமெரிக்காவில் உள்ள தனுஷ், தனது மனைவி மற்றும் மகன்களுடன், லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள திரையரங்கில் ‘கர்ணன்’ படத்தின் சிறப்பு காட்சியை பார்த்து ரசித்திருக்கிறார்.

அமெரிக்க திரையரங்குகளில் கர்ணன் படம் அரங்கம் நிறைந்த காட்சியாக ஓடியதைக் கண்டு தான் மகிழ்ச்சியடைந்ததாக தயாரிப்பாளர் தாணுவிடம் நடிகர் தனுஷ் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.