Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

தேம்பி தேம்பி அழுத தர்ஷா குப்தா. காரணம் என்ன தெரியுமா?

dharsha gupta viral update

நடிகை சன்னி லியோன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் ‘ஓ மை கோஸ்ட்’. இந்த படத்துக்கு ஜாவேத் ரியாஸ் இசையமைத்துள்ளார். இயக்குனர் யுவன் இயக்கத்தில் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் நடிக்கும் படம் ‘ஓ மை கோஸ்ட்’. இதில் அவர் நகைச்சுவை பேய் வேடத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் சன்னி லியோனுடன் நகைச்சுவை நடிகர் சதீஷ், ‘குக் வித் கோமாளி’ புகழ் தர்ஷா குப்தா, சஞ்சனா, யோகி பாபு, தங்கதுரை, ரமேஷ் திலக், ஜி.பி.முத்து உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். ஓ மை கோஸ்ட் இந்த படத்தை வாவ் மீடியா என்டர்டெயின்மென்ட் மற்றும் ஒயிட் ஹார்ஸ் ஸ்டுடியோஸ் சார்பில் வீர சக்தி மற்றும் கே.சசி குமார் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த திரைப்படம் குடும்ப பொழுதுபோக்கு படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்துக்கு ஜாவேத் ரியாஸ் இசையமைத்துள்ளார். இதையும் படியுங்கள்: வெளியானது ‘வால்டேர் வீரய்யா’ படத்தின் புதிய பாடல் ஓ மை கோஸ்ட் இந்நிலையில், ‘ஓ மை கோஸ்ட்’ திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவை முடித்துவிட்டு வெளியில் வந்த நடிகை தர்ஷா குப்தா, நான் அப்படி என்ன செய்தேன். அவர் என்னை ஏன் அப்படி ப்ரொஜெக்ட் செய்கிறார் என்று தேம்பி தேம்பி அழுதார்.

தர்ஷா குப்தா இது குறித்து தர்ஷா குப்தா கூறியதாவது, “நான் நடந்து வந்த போது என்னுடைய ஆடையை யாரோ மிதித்து விட்டார் என்று நான் திரும்பி பார்த்ததை என்னுடைய அசிஸ்டண்டை நான் திட்டியதாகவும் நான் திமிர் பிடித்தவள் என்பது போலவும் போட்டிருந்தார்கள். ஆனால் அது என் தம்பி தான் அவனுக்கு தெரியும் நான் அவனிடம் எப்படி பழகுகிறேன் என்று இது தெரியாமல் பேசுவது வருத்தமாக உள்ளது” என்று கூறினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

dharsha gupta viral update
dharsha gupta viral update