இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்து மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றவர் எம்எஸ் தோனி. இந்தியா முழுவதும் இவர்கள் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது.
இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய்யை ஒரு முறை சந்தித்துள்ளார். அப்போது இருவரும் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன.
இந்தமுறை தல தோனி சியான் விக்ரம் அவர்களை சந்தித்து உள்ளார். ஐபிஎல் ஏலத்திற்காக சென்னை வந்துள்ள தோனியை நேரில் சென்று சந்தித்துள்ளார் சியான் விக்ரம்.
இவர்களின் சந்திப்பின் போது எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி லைக்குகளை அள்ளி குவித்து வருகிறது.
