Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

தோனியின் நாவல் புத்தகத்தை வெளியிட்ட ரஜினி.. வைரலாகும் தகவல்

Dhoni's superhero book published by Rajini

தோனியின் ‘அதர்வா: தி ஒரிஜின்’ என்ற கிராபிக்ஸ் நாவல் புத்தகத்தை நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார்.

இந்திய அணியின் நட்சத்திர முன்னாள் கேப்டன் எம்.எஸ் தோனி, இந்திய அணிக்கு டி20, ஒருநாள் உலகக் கோப்பை உள்ளிட்ட பல கோப்பைகளை வென்று தந்துள்ளார். இது தவிர ஐபிஎல் தொடரில் சி.எஸ்.கே அணிக்கு தலைமை தாங்கும் தோனி, 4 முறை தொடரை வென்று தந்துள்ளார். இதனால் தோனிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் அதிகம்.

எம்.எஸ். தோனி ‘அதர்வா: தி ஒரிஜின்’ என்ற கிராஃபிக் நாவலில் கதாநாயகனாகவும் அறிமுகமாகவுள்ளார். விர்ஸு ஸ்டூடியோஸ் மற்றும் மிடாஸ் டீல்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்து, ரமேஷ் தமிழ்மணி என்பவர் எழுதும் ‘அதர்வா: தி ஒரிஜின்’என்ற கிராபிக்ஸ் நாவலில் வரும் சூப்பர்ஹீரோ கதாபாத்திரத்துக்கு எம்.எஸ்.தோனியின் தோற்றம் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த கிராஃபிக் நாவலுக்கான மோஷன் போஸ்டரை சமீபத்தில் தோனி அவருடைய சமூக வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்டிருந்தார். வரலாற்றுக் கதையை பின்னணியாக கொண்ட இந்த நாவலுக்காக 150 ஓவியங்கள் வரையப்பட்டது. இந்த கிராஃபிக் நாவலில் தோனியின் தோற்றம் ரசிகர்களிடையில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில் தோனியின் ‘அதர்வா: தி ஆர்ஜின்’ என்ற கிராஃபிக் நாவல் புத்தகத்தின் முதல் பிரதியை நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார். இதன் டிரைலரையும் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Dhoni's superhero book published by Rajini
Dhoni’s superhero book published by Rajini