Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

விஜய் மகன் சஞ்சய் இயக்கத்தில் நடிக்க வாய்ப்பு வந்தால் கண்டிப்பாக நடிப்பேன்.. பிரபல நடிகர் வெளியிட்ட மாஸ் தகவல்

Dhruv Vikram About Jackson Sanjay Direction

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இவருடைய மகன் ஜேசன் சஞ்சய் வெளிநாட்டில் சினிமா சார்ந்த படிப்பை படித்து வருகிறார்.

விரைவில் இயக்குனராக தனது தந்தையினை வைத்து ஒரு படத்தை இயக்குவார் என சொல்லப்பட்டு வருகிறது. இந்த நிலையில் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் மகான் படத்தின் ப்ரோமோஷனுக்காக அளித்த பேட்டியில் விஜய் மகன் குறித்து பேசியுள்ளார்.

ஜேசன் சஞ்சய் என்னை அவரது இயக்கத்தில் நடிக்க அணுகினால் கண்டிப்பாக நடிப்பேன் என்று கூறியுள்ளார். இதனால் இந்த கூட்டணி அமைய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு விஜய் மற்றும் விக்ரம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Dhruv Vikram About Jackson Sanjay Direction
Dhruv Vikram About Jackson Sanjay Direction