Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

விக்ரம் நடிக்கும் மகான் படத்தில் இருந்து வெளியான சூப்பர் ஹிட் தகவல்.. உற்சாகத்தில் ரசிகர்கள்

Dhruv Vikram in Rap Song in Mahaan Movie

‘சீயான்’ விக்ரம் நடிப்பில் தயாராகியிருக்கும் ‘மகான்’ திரைப்படம் பல சாதனைகளை படைக்கவிருப்பது உறுதியாகி உள்ளது. இத் திரைப்படம் பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டதிலிருந்து ரசிகர்களின் உற்சாகத்துடன் சரியான அதிர்வை ஏற்படுத்தி வருகிறது. இந்த திரைப்படம் ‘சீயான்’ விக்ரமின் 60வது படம் என்பதுடன், இந்தப் படத்தில் அவருடைய மகனும், நடிகருமான துருவ் விக்ரமுடன் முதன்முறையாக இணைந்து நடித்திருக்கிறார்.

இந்த திரைப்படம் அமேசான் ப்ரைம் வீடியோவில் பிப்ரவரி 10ஆம் தேதி முதல் உலகளவில் வெளியாகிறது. இதற்கு ஒரு நாள் முன்னதாக நடிகர் துருவ் விக்ரம் முதன்முதலாக சொந்த குரலில் பாடிய ‘மிஸ்ஸிங் மீ ..’ எனத் தொடங்கும் ராப் பாடல் வெளியாகிறது. துள்ளலான நடனத்துடன் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உருவாகி இருக்கும் ‘ மிஸ்ஸிங் மீ…’ என்ற பாடலை பாடலாசிரியர் விவேக்குடன் இணைந்து நடிகர் துருவ் விக்ரமும் எழுதியிருக்கிறார். இந்தப் பாடலுக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.

சீயான்’ விக்ரம் நடிப்பில் உருவான ‘மகான்’ படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருக்கிறார். இதனை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் லலித் குமார் தயாரித்துள்ளார். இந்தப்படத்தில் ‘சீயான்’ விக்ரமுடன் துருவ் விக்ரம், பாபி சிம்ஹா மற்றும் சிம்ரன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ‘மகான்’ திரைப்படம் பிப்ரவரி 10ஆம் தேதி முதல் ப்ரைம் வீடியோவில் பிரத்யேகமாக உலகம் முழுவதும் திரையிடப்படுகிறது. தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளிலும் வெளியாகிறது. கன்னடத்தில் இந்த படத்திற்கு ‘மகா புருஷா’ என பெயரிடப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 Dhruv Vikram in Rap Song in Mahaan Movie

Dhruv Vikram in Rap Song in Mahaan Movie