Tamilstar
News Tamil News

துருவ் விக்ரமின் இரண்டாவது படத்திலேயே நடக்கும் மாபெரும் மேஜிக் – யாருடன் இணைந்து நடிக்கப் போகிறார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விக்ரம். திறமையான நடிகர். படத்திற்கு படம் வித்தியாசமான உடலமைப்பையும் நடிப்பையும் வெளிப்படுத்துவதில் வல்லவர்.

இவர் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியன் செல்வன், கௌதம் மேனன் இயக்கத்தில் துருவ நட்சத்திரம், அதை ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா மற்றும் பிரம்மாண்ட படமான கர்ணன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்தப் படங்களைத் தொடர்ந்து சியான் விக்ரம் தன்னுடைய அறுபதாவது படத்தை இயக்கும் வாய்ப்பை இளம் இயக்குனரான கார்த்திக் சுப்புராஜ்க்கு வழங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

மேலும் இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு அவர்கள் தயாரிக்க இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்னொரு சூப்பரான அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது.

அதாவது இந்தப் படத்தில் விக்ரமுடன் இணைந்து அவரின் மகன் துருவ்வும் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

ஆதித்ய வர்மா என்ற படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானார் துருவ். இப்படத்தை தொடர்ந்து இரண்டாவது படத்திலேயே திறமையான நடிகரான தன் அப்பாவுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை அவர் பெற்றுள்ளதால் விக்ரமின் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

ஒரே திரையில் அப்பா, மகன் என இருவரையும் பார்க்க ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் அதிகமாகி உள்ளது. இதன் காரணமாக இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பும் உச்சம் பெற்றுள்ளது.

ரசிகர்கள் விரைவில் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கின்றனர்.