Tamilstar
Health

சர்க்கரை நோயால் அவதிபடுறீங்களா? இதை பண்ணுங்க, 7 நாட்களில் காணாமல் போயிடும்!

ஒரே வாரத்தில் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் முறை.

நிறைய பேர் சர்க்கரை நோயால் பிடித்த உணவுகளை சாப்பிட முடியாமால் கஷ்டப்படுகிறார்கள். நம்ம உடம்பில் தேவையான அளவிற்கு இன்சுலின் இல்லாமல் இருந்தால் குளுக்கோஸ் லெவல் அதிகமாகும். எனவே குளுக்கோஸ் உடம்பில் அதிகமாவதால் தான் சர்க்கரை நோய் வர காரணம்.

இந்த சர்க்கரை நோயை கட்டுப்படுத்த நம்ம வீட்டிலையே ஒரு சில விஷயங்களை செய்தால் போதுமானது. அதை பார்ப்போம் வாருங்கள்.

வெந்தயம்

வெந்தயம் எல்லா வீட்டு சமையலறையிலும் எளிதாக கிடைக்கிற பொருள் தான். உடலுக்கு மிகவும் குளிர்ச்சியை தர்க்க கூடிய வெந்தயத்தில் நீர்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச்சத்து, மாவுச்சத்து, இரும்பு, சோடியம் உள்ளிட்ட பல வகையான சத்துகளை கொண்டது. வைட்டமின் ஏ நிறைந்த வெந்தயத்தை மூன்று விதமாக பயன்படுத்தலாம். முதலில் இரவில் ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை ஒரு க்ளாஸ் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். ஒரு ஸ்பூன் வைத்து மறுநாள் காலையில் நன்றாக மசைக்க வேண்டும். அதனையடுத்து அதனை வடிகட்டிய தண்ணீரை குடிக்க வேண்டும்.

மற்றொரு முறையில் என்னவென்றால் ஒரு லிட்டர் தண்ணீரில் ஒரு டேபிள் ஸ்பூன் வெந்தயத்தை கலந்து அதனை அடுப்பில் வைத்து நன்றாக கொதிக்க வையுங்கள். அதனை ஆற வைத்த பின்னர் அந்த தண்ணீரை குடியுங்கள். அடுத்ததாக மூன்றாவது முறையாக ஒரு பௌலில் நான்கு டீஸ்பூன் வெந்தயத்தை 4 டீஸ்பூன் தண்ணீருடன் கலந்து கொள்ளுங்கள். ஒருநாள் இரவு முழுவதும் ஊற வைத்த அந்த தண்ணீரை மறுநாள் காலையில் அதிலுள்ள தண்ணீரை மாற்றி விட்டு, அந்த பௌலினை பிரிட்ஜில் மூன்று நாட்களாவது வைக்க வேண்டும். மூன்று நாட்கள் கழித்து பார்க்கும் போது அந்த வெந்தயத்தில் முளை வந்திருக்கும். கசப்புதன்மை இல்லாத அந்த வெந்தயத்தை ஒரு நாளில் ஒரு டீஸ்பூன் வைத்து சாப்பிட வேண்டும்.

இந்த மூன்று முறைகளில் எது வேண்டுமானாலும் பயன்படுத்தி சர்க்கரை நோயை கட்டுப்படுத்தலாம்.

வெண்டைக்காய்

வெண்டைக்காய் மூளையின் செயல்திறனை அதிகரிக்க பயன்படுகிறது. மேலும் ஞாபகசக்தியை அதிகரிக்கிறது. மேலும் இந்த வெண்டைக்காயை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறையாவது சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை குறைக்கும். வெண்டைக்காயில் உள்ள அந்த வழுவழுப்பான பகுதி சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதவுகிறது. இதை எவ்வாறு பயன்படுத்த வேண்டுமென்றால் ஒரு லிட்டர் தண்ணீரை எடுத்து அதில் மூன்று அல்லது நான்கு வெண்டைக்காயை சிறிது சிறிதாக வெட்டி போட வேண்டும். மறுநாள் காலையில் வெண்டைகாயை எடுத்து நல்ல பிழிந்து விட்டு அந்த தண்ணீரை குடித்து பாருங்கள்.

நெல்லிக்காய்

நெல்லிக்காய் சாப்பிடுவதால் தோலில் உள்ள செல்கள் புத்துணர்வு பெற்று, ரத்த ஓட்டத்தை சீராக வைக்கிறது. மேலும் இதில் வைட்டமின் சி தோல்வியை புற்று நோய்க்கு வராமல் தடுக்கிறது. நெல்லிக்காயை சிறிது சிறிதாக நறுக்கி மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்த ஜூஸில் பாதி தண்ணீரை கலந்து சாப்பிடுவதற்கு பின்னர் குடித்து பாருங்கள்.

ஒரு நாள் வெந்தய தண்ணீரை குடித்தால் மறுநாள் நெல்லிக்காய் தண்ணீரும், அதற்கு அடுத்த நாள் வெண்டைகாய் தண்ணீர் என குடித்து பாருங்கள். விரைவில் சர்க்கரை வியாதி கட்டுப்படுத்த முடியும். நீங்களும் வீட்டில டிரை பண்ணி பாருங்கள்.