Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

லிஸ்டில் வராத வாரிசு. தில் ராஜு பேச்சால் ரசிகர்கள் கேள்வி

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார்.

இதற்கு முன்னதாக இவரது நடிப்பில் வெளியான லியோ மற்றும் வாரிசு ஆகிய திரைப்படங்கள் கலையான விமர்சனங்களை சந்தித்தனர். வாரிசு திரைப்படத்தை தெலுங்கு திரையுலகத்தை சேர்ந்த தில் ராஜு அவர்கள் தயாரித்திருந்தார்.

இப்படி இருக்கையில் தயாரிப்பாளர் தில் ராஜு அவர்கள் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசியது ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் நாங்கள் விநியோகம் செய்த Masooda, Bimbisara, ஜெயிலர், அனிமல், லவ் டுடே, பொன்னியின் செல்வன், தசரா போன்ற திரைப்படங்கள் நல்ல லாபத்தை கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.

இந்த லிஸ்டில் அவர் வாரிசு படத்தை சொல்லாமல் விட்ட நிலையில் அப்புறம் லாபத்தை கொடுக்கவில்லையா என்று கேள்வி நெட்டிசன்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Dil Raju latest speech Viral
Dil Raju latest speech Viral