தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்தை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள் இருக்கும் நிலையில் இருவரும் விவாகரத்து பெற்று பிரிய போவதாக அறிவித்தனர். இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனையடுத்து ஐஸ்வர்யா சிம்புவை வைத்து ஒரு படத்தை இயக்க இருப்பதாக தகவல் பரவியது. ஆனால் அதன் பிறகு இந்த தகவல் உண்மையில்லை என சிம்பு தரப்பில் கூறியிருந்தனர்.
இதனையடுத்து ஐஸ்வர்யா சமீபத்தில் ராகவா லாரன்ஸ் அவர்களை சந்தித்திருந்தார். இதனால் ராகவா லாரன்ஸ் நடிக்கும் துர்கா என்ற படத்தை ஐஸ்வர்யா இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிம்புவை இயக்கப்போவதாக சொல்லப்பட்டு வந்த நிலையில் தற்போது ஐஸ்வர்யா ராகவா லாரன்சை இயக்க முடிவு செய்திருப்பது தனுஷ் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Director Aishwarya Rajinikanth Decision on Upcoming Movie