தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் ஏ எல் விஜய். மதராசபட்டினம், கிரீடம், தலைவா உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கிய இவர் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களை இயக்கி வருகிறார்.
நடிகை அமலா பாலை காதலித்து திருமணம் செய்த ஒரே வருடத்தில் அவரை விவாகரத்து செய்து விட்டார். இப்படியான சூழலில் தன்னுடைய பெயரில் சமூக வலைதளங்களில் போலி கணக்கை உருவாக்கி மோசடிகள் நடந்து வருவதாகவும் அதை நம்ப வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
