தமிழ் சினிமாவில் ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லி. பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் உதவி இயக்குனராகப் பணியாற்றிய இவர் முதல் படத்தில் வெற்றி கண்டவுடன் தளபதி விஜயை வைத்து தெறி, மெர்சல், பிகில் என மூன்று படங்களை இயக்கினார்.
இதைத்தொடர்ந்து பாலிவுட் படம் இயக்கிய அட்லி தொடர்ந்து பாலிவுட் சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் அன்னையர் தினமான நேற்று இவர் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
அதாவது தன்னுடைய மனைவி பிரியாவிற்கு முத்தமிட அவரது மகன் அட்லியை பிடித்து தள்ளுவது போல் உள்ளது. இதைப் பார்த்து ரசிகர்கள் இந்த வீடியோவுக்கு லைக்குகளை குவித்து வருகின்றனர்.
View this post on Instagram