‘சேது‘ வில் ஆரம்பித்து ‘நந்தா‘, ‘பிதாமகன்‘, ‘நான் கடவுள்‘, ‘அவன் இவன்‘ என மக்களிடம் மிரட்சியை ஏற்படுத்தின படங்களை இயக்கியவர் டைரக்டர் பாலா.
2017 ‘நாச்சியார்‘ படம் ரிலீஸுக்கு பிறகு எந்த படமும் ரிலீஸ் ஆகவில்லை.

பல வருடங்களாக பாலாவுக்கும் அவரது மனைவிக்கும் கருத்து வேறுபாடு எற்பட்டுள்ளது என்று வலை தளங்களில் செய்திகள் வெளிவந்தது. இதற்கு எல்லாம் மவுனம் காத்தார் பாலா.
17 வருடங்கள் முன் பாலாவுக்கும் முத்துமலருக்கும் (5.7.2004) மதுரையில் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது.
கடந்த 4 வருடங்களாக மனதளவில் பிரிந்திருந்த நிலையில், நேற்று முன்தினம் (5.3.2022) இருவரும் சட்டபூர்வமாக சுமூகமான முறையில் பிரிந்தார்கள்.