தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் பாலா. பல வெற்றிப் படங்களை கொடுத்து பல விருதுகளை வாங்கியுள்ள இவர் அடுத்ததாக சூர்யாவை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார்.
இந்த நிலையில் கடந்த வாரம் இயக்குனர் பாலா தன்னுடைய மனைவி முத்துமாலை விவாகரத்து செய்து சட்டபூர்வமாக பிரிந்தார். அதன் பின்னர் தமிழச்சி பாண்டியன் அவர்களின் மகளின் திருமணத்தில் பாலாவும் அவரது மனைவியும் சந்தித்து கொண்டுள்ளனர்.
இந்த திருமண நிகழ்ச்சியில் தனது மகளை பார்த்த பாலா அவரை தூக்கி கொஞ்சியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.