தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியான வலிமை படத்தை தொடர்ந்து மீண்டும் மூன்றாவது முறையாக எச். வினோத் அவர்களுடன் கூட்டணி அமைத்து போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் “துணிவு” படத்தில் நடித்து வருகிறார். ஜிப்ரான் இசையமைக்கும் இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்கிறார். மேலும் பல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று துணிவு படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. போஸ்டரை உற்று கவனிக்கும்போது படத்தின் மையக்கதையை சற்று கவனிக்க முடிகிறது. அந்தப் போஸ்டரில் துணிவு என்ற தலைப்பு ரூபாய் நோட்டில் இடம்பெற்று இருக்கிறது. இதன் மூலம் இப்படம் முழுக்க முழுக்க பணத்தை சுற்றி நகரப் போகிறது என்பது தெரிய வந்துள்ளது.
மேலும் இப்படம் பேங்க் சம்பந்தப்பட்ட கதை என்பதும் இதில் அஜித் வில்லனாகவும் நடித்து வருகிறார் என்பதும் தெரிந்த நிலையில் இயக்குனர் வினோத் இப்படத்தில் திருடன் போலீஸ் விளையாட்டை அவரது ஸ்டைலில் மாசாக காட்டப் போகிறார் என்பதையும் துணிவு போஸ்டர் உணர்த்துகிறது. அதனால் இப்படம் ரசிகர்களுக்கு செம ட்ரீட்டாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

director-conveys-the-story thunivu-poster