தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் இறுதியாக வெளியான ஜெய்பீம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தை கூட்டத்தில் ஒருவன் பட புகழ் ஞானவேல் இயக்கியிருந்தார்.
ரசிகர்கள் மத்தியில் இந்த படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற நிலையில் மீண்டும் இந்த கூட்டணி அமைய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமாக இருந்து வருகிறது.
இப்படியான சூழலில் தற்போது விருது விழா ஒன்றில் கலந்து கொண்டபோது இயக்குனர் ஞானவேல் மீண்டும் சூர்யாவுடன் இணைந்து ஒரு படத்தை உருவாக்குவேன் என தெரிவித்துள்ளார். இதனால் சூர்யா ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.