Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

லியோ படம் குறித்து லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்த கெளதம் மேனன். பதிவு இதோ

தமிழ் சினிமாவில் தனித்துவமான திரைப்படங்களை இயக்கி தனக்கென தனி இடம் பிடித்து முன்னணி இயக்குனராக வலம் வருபவர் கௌதம் மேனன். இவர் இயக்குனராக மட்டுமின்றி நடிகராகவும் பல படங்களில் நடித்து அசத்தி வருகிறார். அந்த வகையில் பத்து தல திரைப்படத்தின் வரவேற்பு தொடர்ந்து தற்போது விஜயின் நடிப்பில் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

தற்போது சமீபத்திய நேர்காணலில் இயக்குனர் கௌதம் மேனன் பகிர்ந்திருக்கும் லியோ திரைப்படம் குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர், லியோவில் எனக்கு திரிஷாவுடன் காட்சிகள் உள்ளன, படத்தில் வில்லன், நண்பன் என பல கேரக்டரில் நடித்துள்ளேன். எனது கதாபாத்திரத்தின் பெயர் ‘ஜே’ என்ற எழுத்தில் தொடங்குகிறது என்று கூறியிருக்கிறார். இந்த தகவல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இணையத்தில் வைரலாகி வருகிறது.