Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

எச்.வினோத் இயக்கத்தில் அடுத்ததாக நடிக்கப் போகும் ஹீரோ யார் தெரியுமா? இணையும் மாஸ் கூட்டணி

director h-vinoth-join-with-kamalhaasan

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவர் தற்போது தீரன் அதிகாரம் ஒன்று சதுரங்க வேட்டை உள்ளிட்ட படங்களை இயக்கிய வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் துணிவு என்ற படத்தில் நடித்துள்ளார்.

போனி கபூர் தயாரிப்பில் ஜிப்ரான் இசையில் உருவாக்கிய இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்தது தொடர்ந்து தற்போது டப்பிங் பணிகள் நடந்து வருகிறது. படத்தை 2023 பொங்கலுக்கு வெளியிட படக்குழு முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தைத் தொடர்ந்து வினோத் அடுத்ததாக யாரை இயக்கப் போகிறார் என்பது குறித்த தகவல் ஒன்று கசிய தொடங்கியுள்ளது. அதாவது உலக நாயகன் கமல்ஹாசனை வைத்து வினோத் படத்தை இயக்கப் போவதாகவும் அதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் சொல்லப்படுகிறது.

கமல், லோகேஷ் கனகராஜ் கூட்டணி போல இந்த கூட்டணியும் மிகப்பெரிய வெற்றிக் கூட்டணியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 director h-vinoth-join-with-kamalhaasan

director h-vinoth-join-with-kamalhaasan