Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

அருவா படம் ட்ராப் ஆனதற்கான காரணம் சொன்ன இயக்குனர் ஹரி.. உற்சாகத்தில் ரசிகர்கள்

director hari-about-aruvaa-movie-dropped

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் இறுதியாக எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து ஹரி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் நடிக்க இருந்தார்.

ஆனால் இந்த படம் திடீரென கைவிடப்பட்டது. இதனையடுத்து இயக்குனர் ஹரி அருண் விஜய்யை வைத்து யானை என்ற படத்தை இயக்கியுள்ளார். படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இயக்குனர் ஹரியிடம் அருவா படம் கைவிடப்பட்டதற்கான காரணம் என்ன என கேட்கப்பட்டது.

அதற்கு ஹரி சொன்னதாவது, படம் இன்னமும் அப்படியே தான் இருக்கிறது. சில தவிர்க்க முடியாத காரணங்களால் இப்படம் தள்ளிப்போனது. ஆனால் விரைவில் இந்த படம் தொடங்கும் என தெரிவித்துள்ளார். இதனால் சூர்யா ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

ஏற்கனவே சூர்யா-ஹரி கூட்டணியில் 5 திரைப்படங்கள் வெளியான நிலையில் 6வது முறையாக இந்த கூட்டணி அமைய இருந்தது குறிப்பிடத்தக்கது. ‌

director hari-about-aruvaa-movie-dropped
director hari-about-aruvaa-movie-dropped