Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

அருவா படம் குறித்து ஹரி கொடுத்த லேட்டஸ்ட் அப்டேட்.. உற்சாகத்தில் ரசிகர்கள்

Director hari-about-aruvaa-movie

தென்னிந்திய சினிமாவின் பிரபல இயக்குனராக வலம் வருபவர் ஹரி. இவரது இயக்கத்தில் வெளியாகி யானை திரைப்படம் பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இதனால் சூர்யா நடிப்பில் உருவாக இருந்து ஓரம் கட்டப்பட்டுள்ள அருவா திரைப்படம் வெளியாகுமா ஆகாதா? படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்த நிலையில் ஹரி அளித்த பேட்டி வந்தேன் அருவா படம் குறித்து கேட்டதற்கு அருவா படம் தான் அருண் விஜய் நடித்த யானை படம் என சொல்கின்றனர். ஆனால் இது வேற கதை அது வேற கதை. அருவா படம் இன்னும் அப்படியே தான் இருக்கிறது. படம் கைவிடப்படவில்லை, சூர்யா நடித்த படங்களில் பிசியாக இருப்பதன் காரணத்தினால் இந்த படம் தள்ளிப் போய் உள்ளது. சரியான நேரத்தில் நிச்சயம் படம் தொடங்கும் என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் எடுக்கத்தான் முடிவு செய்யப்பட்டது. ஆனால் திரைக்கதையை அமைத்த பிறகு பேன் இந்தியா படமாக வெளியாகுமா என்பது முடிவு செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

இதனால் சூர்யா ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.

 Director hari-about-aruvaa-movie

Director hari-about-aruvaa-movie