தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் அருண்விஜய். இவர் பிரபல நடிகர் ஆன விஜயகுமாரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. அருண் விஜய்யின் நடிப்பில் சமீபத்தில் வெளியான “O My Dog”திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து இவர் இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவாகியிருக்கும் “யானை” திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் ஜூலை 1ஆம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகும் என்று அதிகாரபூர்வமான தகவலை படக்குழு வெளியிட்டிருந்தது. இப்படத்திற்கான புரோமோஷன் வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் இப்படத்தின் இயக்குனரான ஹரி அவர்களை பிரபல சேனலில் இருந்து பேட்டி எடுத்து உள்ளனர். அதில் அவர்கள் இயக்குனர் ஹரியிடம் ஏன் நீங்கள் அருண் விஜய்யை வைத்து இவ்வளவு காலமாக படம் எடுக்கவில்லை என்ற கேள்வியை எழுப்பி உள்ளனர். அதற்கு ஹரி கூறியிருந்தது, என்னிடம் இதே கேள்வியை நிறைய பேர் கேட்பார்கள். அவர்களுக்கும் இந்த உண்மை இப்போ தான் புரிய வந்திருக்கும். நான் ஒரு முழு நேர கிரியேட்டர் இல்லை. நான் ஒரு செமி கிரியேட்டர் . ஒரு கமர்சியலா ஒரு வேலை பார்ப்பது போல நான் பாலா சாரோ, அமீர் சாரோ கிடையாது. யாரை வேணாலும் ஒரு ஆளுமையான படத்தை எடுக்க என்னால் முடியாது. ஆனால், அருண் விஜய் ஆகவே நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து தன்னை தானே நிறுத்திக் கொள்ளும் போது தான் அவரை வைத்து படம் பண்ணும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
ஒரு காலேஜ் அட்மிஷனுக்கு போனேன். ஒரு விஐபியை சந்தித்தபோது அவர் சொன்ன விஷயம், ரெகமெண்டேஷன் மூலம் மகனுக்கு சீட் கேட்பதைவிட அவனாகவே அந்த சீட்டை பெறும் போது அவன் இன்னும் உறுதியாகவும் தகுதியாகவும் நினைப்பான். அதுக்கு முதலில் வழிவிட வேண்டும். அவனுக்காக கிடைக்கும் ஒன்றை நீங்கள் ஏன் தடுக்கிறீர்கள்? அவனுக்கு அந்த சீட் கிடைத்தால் கல்லூரி காலம் முழுவதும் தன்னம்பிக்கையுடன் இருப்பான் என்று சொன்னார். அப்போது அவர் சொன்னது உண்மையான வார்த்தைகள். அதுமாதிரிதான் இந்த விஷயமும் என்று சுவாரசியமாக பதிலளித்துள்ளார்.