சாமி, சிங்கம், வேல், ஆறு, பூஜை என பல்வேறு கமர்ஷியல் ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் ஹரி, அடுத்ததாக அருண் விஜய் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார்.
இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்க உள்ளார். தற்போது இதில் நடிக்கும் இதர நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இயக்குனர் ஹரியும் – ஜிவி பிரகாஷும் ஏற்கனவே கடந்த 2008-ல் வெளியான சேவல் படத்தில் இணைந்து பணியாற்றி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.