தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை என்ற திரைப்படத்தை எச் வினோத் இயக்கினார். இந்த படத்தை போனிகபூர். மூவருக்குமே இதுதான் முதல் கூட்டணி. இதனைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக இவர்களது கூட்டணியில் வலிமை என்ற திரைப்படம் வெளியாகியுள்ளது.
இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் வெறித்தனமான வேட்டையாடி வருகிறது. இதனைத் தொடர்ந்து மீண்டும் மூன்றாவது முறையாக இதே கூட்டணியில் அஜித் 61 என்ற திரைப்படம் உருவாக உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் மார்ச் மாதத்தில் தொடங்கும் என சொல்லப்பட்டு வருகிறது.
அதன்பிறகு மீண்டும் எச் வினோத் போனி கபூர் தயாரிப்பில் நான்காவது முறையாக படத்தை இயக்கப் போவதாக தகவல் கிடைத்துள்ளது. ஆனால் இந்த முறை ஹீரோ அஜித் இல்லை. தமிழ் சினிமாவின் ஹீரோ, வில்லன் என கலக்கி வரும் விஜய் சேதுபதியை வைத்து ஒரு காமெடி படத்தை இயக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் கசிந்துள்ளன.
